தமிழ் செம்மொழி பாடம் நடத்த தடை


சென்னை, :'பிளஸ் 2 வகுப்பில், தமிழ் செம்மொழி குறித்த பாடத்தை, மாணவர்களுக்கு நடத்த வேண்டாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பாட திட்டத்தில், பிளஸ் 2வில், நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. இதில், பல பாடங்களில் பிழைகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 ஆங்கில பாடப் புத்தகத்தில், ஐந்தாம் பாடமாக, தமிழ் செம்மொழி பாடம் இடம் பெற்றுள்ளது.

இதில், தமிழ் மொழி, கி.மு., 300 ஆண்டுகளுக்கு முன் உருவானது; சமஸ்கிருதம், கி.மு., 2,000 ஆண்டுகளுக்கு முன் உருவானது. ஹீப்ரு, லத்தீன் போன்ற மொழிகளும், அதற்கு முன் உருவானதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இதையடுத்து, புத்தக தயாரிப்பில் ஈடுபட்ட, 13 பேர் விளக்கம் அளிக்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 'சர்ச்சைக்குரிய இந்த பாடத்தை மாணவர்களுக்கு நடத்த வேண்டாம்; தேர்வில் கேள்விகளும் கேட்க வேண்டாம்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment