இன்ஜி., புதிய மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம்

சென்னை, :பிளஸ் 2 முடித்து, கவுன்சிலிங் வழியாக, இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி வழங்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.நேரடியாக, இன்ஜி., பாட வகுப்புகளை துவங்காமல், அவர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள், யோகா, விளையாட்டு, தனித்திறன் வளர்ப்பு போன்றவற்றை, முதலில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதன்படி, அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளில், நேற்று முதல், ஒருங்கிணைப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன. மாணவர்கள், குழுக்களாக பிரிக்கப்பட்டு, நாட்டியம், நாடகம், யோகா, பல்வகை விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.அண்ணா பல்கலை வளாகத்தில், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு, ஆக., 8 வரை, நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

No comments:

Post a Comment