காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 07-08-2019 - thennarasu
குறள் -176

*இன்றையப திருக்குறள்*

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
 பொல்லாத சூழக் கெடும்.

மு.வ உரை:

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

கருணாநிதி  உரை:

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

சாலமன் பாப்பையா உரை:

அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்துக் கொண்டு பலன் பெற வேண்டும்.
- அறிஞர் அண்ணா
✳✳✳✳✳✳✳✳

*பழமொழி*

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

Everyone rakes the embers to bake his own cake.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important  Used Words*

 Spice  மசாலா

 Pepper  மிளகு

 Egg  முட்டை

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

Homonyms generally include two categories of word types:
1.homophones

2. homographs.

Homographs are words that are spelled the same but have different meanings.

Homophones are words that sound the same when you pronounce them, but have different meanings.

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

*அகத்திணை*

கைக்கிளை
குறிஞ்சித்திணை
முல்லைத்திணை
மருதத்திணை
நெய்தல் திணை
பாலைத்திணை
பெருந்திணை

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*முட்டாளை மணந்த இளவரசி*

 ஒரு நாட்டு அரசனுக்கு மிகுந்த அறிவுடைய ஒரு மகள் இருந்தாள். அவள் யார் பேசினாலும் தன் அறிவினாள் அவர்களை மடக்கிவிடுவாள்.

 அரசன் இளவரசிக்கு திருமண செய்ய நினைத்தார். அப்போது இளவரசி தந்தையே! என்னை திருமணம் செய்பவர் யாராக இருந்தாலும் பேச்சாற்றலில் என்னை வெற்றி பெறுபவரைத் தான் மணப்பேன் என்றாள் அவள்.

 அதனால் பல நாட்டு இளவரசர்களும் அறிஞர்களும் போட்டியில் கலந்து கொள்ள அரண்மனைக்கு வந்தனர். அனைவரையும் தோற்கடித்து வெளியே அனுப்பினாள் இளவரசி.

 ஏராளமான கூட்டம் அரண்மனைக்கு வருவதை பார்த்த அரசன் போட்டியில் வென்றால் திருமணம் தோற்றால் நூறு கசையடி என்று அனவருக்கும் தெரிவிக்கச் சொன்னான். இதனால் இளவரசியுடன் போட்டியிட அதிகம் யாரும் வரவில்லை. வந்தவர்களும் தோற்று கசையடி வாங்கிக் கொண்டு சென்றனர்.

 அந்த நாட்டில் பிச்சைக்கார இளைஞன் இளவரசியை மணப்பதற்காக நடக்கும் போட்டியைப் பற்றி அறிந்தான். முயற்சி செய்து பார்ப்போம் என்று தன் ஊரில் இருந்து தலைநகரத்திற்கு செல்ல ஆரம்பித்தான்.

 நீண்ட தூரம் சென்றதும் வழியில் இறந்து போன கோழி ஒன்று இருந்ததைப் பார்த்து இது எதற்காவது பயன்படும் என்று அவன் சாக்குப் பைக்குள் அந்தக் கோழியைப் போட்டான்.

 இன்னும் சிறிது தூரம் சென்றதும் வழியில் கிடந்த சிறு தொட்டியையும் மாடுஇ ஆடுகளைக் கட்டும் தடியையும் குதிரையின் கால் குளம்பு மற்றும் பல வளைவுகளை உடைய ஆட்டின் கொம்பு ஒன்று இவை அனைத்தையும் எடுத்துகொண்டு அரண்மனைக்குச் சென்றான்.

 காவலுக்கு இருந்த வீரர்கள் கந்தல் ஆடையுடன் இருப்பதைப் பார்த்து சிரித்தனர். இளவரசியுடன் போட்டியிட வந்துள்ளேன். என்னை உள்ளே விடுங்கள் என்றான் அவன். பிச்சைக்காரனாகிய உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டான் வீரன் ஒருவன். என் திறமையான பேச்சினால் இளவரசியை வெல்வேன் இளவரசியிடம் சொல் என்று உறுதியுடன் சொன்னான் அவன்.

 வீரர்கள் இளவரசியிடம் பிச்சைக்கார இளைஞன் ஒருவன் போட்டிக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவனை இங்கு அனுப்பி வையுங்கள் என்றாள் அவள்.

 பிச்சைக்காரன் உள்ளே நுழைந்து பனிக்கட்டியை விட குளிர்ந்த கைகளை உடைய இளவரசியாரே வணக்கம் என்றான் அவன். என் கைகள் சூடாக உள்ளது. இந்தச் சூட்டில் ஒரு கோழியை வறுபட்டு விடும். என்று வெடுக்கெனப் பதில் தந்தாள் அவள்.

 அப்படியா? கோழி வறுபடுமா என்று பார்க்கிறேன் என்று சொல்லி செத்த கோழியை வெளியே எடுத்தான். அவன் நடந்ததைக் கண்டு திகைத்தாள் தன் திகைப்பை மறைத்து சூடுபட்டால் கோழியின் கொழுப்பு ஒழுகுமே என்றாள். தொட்டியை எடுத்து இதற்குள் ஒழுகுவதை பிடித்துக் கொள்ளலாம் என்றான்.

 தொட்டி விரிசல் விட்டிருந்தால் ஒழுகுமே என்றாள். குதிரைக் குளம்பை எடுத்த அவன் விரிசலை அடைத்து விடலாம் என்றான். எப்படி எதிர்க் கேள்வி கேட்டாலும் பதில் வைத்திருக்கிறானே என்று நினைத்துக்கொண்ட தொட்டியை விட குளம்பு பெரிதாக இருக்கிறது. எப்படித் தொட்டியை அடைக்க முடியும் என்று கேட்டாள்.

 அவன் கொண்டுவந்த தடியை வெளியே எடுத்து குளம்பிற்குள் தொட்டியை இறுக்கமாகப் பொருத்த முடியும்க் என்றான் அவன். ஏறுமாறான கேள்விகளுக்குத் தக்க பதில் தருகிறானே என்று ஆச்சரியப்பட்டு அவனை மடக்க நினைத்த அவள் இளைஞனே! நான் என்ன சொன்னாலும் அதை வேறொன்றாகத் திருப்பி விடுகிறாய். நாக்கு பல திருப்பங்கள் இருப்பது போல நீ நடந்து கொள்கிறாய் என்றாள் அவள்.

 தன் பைக்குள் இருந்த ஆட்டுக்கொம்பை எடுத்துக் காட்டி இதைவிட அதிக திருகுகள் உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டான்.

 இளவரசிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நீண்ட நேரம் யோசித்தால். அதன்பின் இளவரசிக்கும் அவனுக்கும் திருமணம் நடத்தி வைத்தான் அரசன்.

நீதி :
அறிவுடையோர் எவரையும் வெல்வார்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: பள்ளி கல்வித்துறை.

🔮கரூர் அருகே வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்து அசத்தினர். இந்த செயற்கை கோள் வருகிற 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

🔮காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் : இந்தியாவிற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு.

🔮லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்ற சீனா எதிர்ப்பு: இந்தியா நிராகரிப்பு.

🔮உலகில் கால்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள் ஆய்வில் தகவல்.

🔮காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் - புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு.

🔮India asserts J&K reorganisation bill internal matter as China objects to making Ladakh UT.

🔮Consumer Protection Bill 2019: A major step forward in consumer empowerment.

🔮Durand Cup: East Bengal maul Jamshedpur FC to brighten last four hopes.

💐💐💐💐💐💐💐💐

*தொகுப்பு*

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

No comments:

Post a Comment