விதைப்பந்து பற்றி சில நாட்களாக பதிவிட நினைத்தது...அனைவரும் படித்து அவரவர் கருத்தை கூறுங்கள்... தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறேன்...

தமிழகத்தில் தட்பவெப்ப சூழல் விதைப்பந்துக்கு ஏற்றதல்ல... 
மூன்று நான்கு அடி வளர்ந்த மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதே பெரும் சவாலாக இருக்கும் போது வீசி எறியும் விதைப்பந்து முளைத்து வளர்ந்து மரமாகும் என்ற நம்பிக்கை எப்படி வருகிறது உங்களுக்கு...

ஒவ்வொரு விதையும் ஒவ்வொரு உயிர்...
ஒவ்வொரு மரம்...

அப்படிப்பட்ட விதைகளை விதைப்பந்து என்னும் பெயரில் எங்கோ வீசி எறிந்து 90% விதைகளை அழித்து விடுவது நியாயமா???

விதைகள் இருப்பின் தேவைப்படும் K M A Dhana Pal போன்ற நபர்களிடம் கொடுத்து அதை மரக்கன்றுகளாக பெற்றுக் கொள்ளுங்கள்...

விதைப்பந்து வீசுவதால் 
மரமாவது 10% க்கும் கீழே...
இருப்பினும் விதைப்பந்து தூவ காரணம் தூவி விட்டால் கடமை முடிந்து விடுகிறது.....

நான் எம்பள்ளியில் செயல்படுத்தி வரும் 
வீடு தோறும் நர்சரி திட்டத்தில்
70 % மரக்கன்றுகளை கண் முன்பே வளர்வதை பார்க்கலாம்...

விதை பந்து தயாரித்து மரம் வளர்க்கும் முறைக்கு மாற்றாக 
பள்ளி மாணவர்களைக் கொண்டு மரக்கன்றுகளை வளர்க்கும் முயற்சியில் 
நர்சரியில் பயன்படுத்தும் கருப்பு நிற கவரில் புங்கன், வேம்பு, பூவரசம்,கொன்றை, இலுப்பை போன்ற விதைகளை ஊன்றி ஒவ்வொரு மாணவருக்கும் 100 முதல் 200 மரவிதைகள் அடங்கிய கவர் தயார்செய்து வீடுதோறும் நர்சரி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

அதை மாணவர்கள் நான்கு மாதங்கள் வீட்டில் வைத்து வளர்த்து வளர்ந்த மரக்கன்றுகளை பள்ளிக்கு எடுத்து வரச்செய்து பள்ளிக்கு தேவையான மரங்களை வைத்து மீதமுள்ள மரக்கன்றுகளை அருகில் உள்ள பள்ளிகள் , பொது இடங்கள், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்...

இத் திட்டத்தின் பலன்கள்...
1. மரம் வளர்க்கும் ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது...
2. விதைகள் வீணாவது குறைந்து அதிக மரக்கன்றுகளை பெறலாம்
3.விதைப்பந்து போன்று இல்லாமல் மரக்கன்றுகள் நம் கண் முன்னே வளர்ந்து வருவதைக் கண்டு மகிழலாம்...

மரம் வளர்ப்போம் 
வாருங்கள்…

மரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம்

குறிப்பு: 
விதைப்பந்து தயாரித்து வியாபாரம் செய்பவர்களை விட அதை வாங்குபவர்கள் தான் பாவம்