குறைவான சம்பள நிதி ஒதுக்கல் 300 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிக்கல்

திண்டுக்கல் : அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் நடப்பாண்டு 303 கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளத்துக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


மாநிலத்தில் 92 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. கல்லுாரிகளில் முதல் சுழற்சியில் 2,423 கவுரவ விரிவுரையாளர்களும், இரண்டாம் சுழற்சியில் 1,661 பேரும் பணியாற்றி வருகின்றனர். ஜூன் - ஏப்ரல் வரையிலான 11 மாத கணக்கின்படி இவர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் பணி புரிவதற்கான ஒப்பளிப்பு ஆணை மற்றும் சம்பளத்துக்கான ஆணை வெளியிடப்படுகிறது.நடப்பாண்டு முதல் சுழற்சியில் 2,120 கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதற்காக ஒரு கவுரவ விரிவுரையாளருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வீதம் 11 மாதங்களுக்கு ரூ.34 கோடியே 98 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர் சங்க மாநில தலைவர் தங்கராஜ் கூறும்போது, ''முதல் சுழற்சியில் பணி புரிபவர்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. நடப்பாண்டு நிதி ஒதுக்கீட்டில் 303 பேருக்கு குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

கல்லுாரிகள் வாரியாக மொத்த நிதியை பிரித்து வழங்கும்போதுதான் பணி நீக்கப்படுகிறவர்கள் விபரம் தெரிய வரும். திடீரென இவர்களை நீக்கினால் அவர்கள் பாதிப்புக்குள்ளாவதுடன், மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment