'போராடிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தம்'

வேலுார், ''போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது'' என தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சேகர் கூறினார்.அவர் கூறியதாவது:மத்திய அரசு அறிவித்த புதிய கல்வி கொள்கையால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகள் இருக்காது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரியில் ஜாக்டோ - ஜியா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அரசு அலுவலர், ஆசிரியர்கள் என 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் அரசு அலுவலர், ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

1 comment:

  1. We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply

    Now!,For more info Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete