மக்களவை தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு வெகுமதி வழங்குங்கள்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
மக்களவை தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு வெகுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (கலெக்டர்கள்) எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:


மக்களவை தேர்தலில் பணியாற்றிய வருவாய்த்துறை ஊழியர்களுக்கு வெகுமதி (மதிப்பூதியம்) வழங்கப்பட வேண்டும். அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரி, துணை தேர்தல் நடத்தும் அதிகாரி, தாசில்தார், மண்டல அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர்களின் அடிப்படை சம்பளமாக 33 ஆயிரத்துக்கு மிகாமல் வெகுமதி வழங்க வேண்டும். அடுத்து, டிஇஓ, ஆடிஓ,  உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.24,500க்கு மிகாமல் பணம் வழங்க வேண்டும். 

அதேபோன்று தேர்தல் பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அதிகாரிகள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.17 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என்ற அடிப்படையில் பணம் வழங்க வேண்டும். இந்த தொகையை வருகிற 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment