பி.எட்., சேர்க்கைக்கு இன்று கவுன்சிலிங்

சென்னை:தமிழக அரசின், பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, அரசின் ஒற்றை சாளர கவுன்சிலிங் வாயிலாக நடத்தப்படுகிறது. 


சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன கல்லுாரியில், இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு, ஒரு வாரத்திற்கு முன் முடிந்தது. இதையடுத்து, இன்று முதல் கவுன்சிலிங் துவங்க உள்ளது.

வரும், 13ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கும்; 12ம் தேதியன்று, பக்ரீத் விடுமுறை என்பதால், அன்று மட்டும் கவுன்சிலிங் நடக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டியவர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் விபரங்கள்,http://www.ladywillingdon.com என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment