சென்னை, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து உள்ளது.இதற்காக தயாரிக்கப்பட்ட விதிகளை பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கையாக அனுப்பிஉள்ளார். அதில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தனித்தனியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பள்ளி கல்வியின் கல்வி மேலாண்மை இணையதளமான 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் மட்டுமே லேப்டாப் வழங்க வேண்டும். சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கக்கூடாது என்பது உட்பட பல விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.