பி.டி.எஸ்., படிப்பில் சேர நாளை இறுதி கட்ட கவுன்சிலிங்

சென்னை : பி.டி.எஸ்., என்ற, பல் மருத்துவ படிப்பிற்கான இறுதி கட்ட கவுன்சிலிங், நாளை நடக்கிறது. 


அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங்கை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதில், அரசு ஒதுக்கீடடில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இந்நிலையில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 211 பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பாமல், காலியாக உள்ளன. 

இந்த படிப்புகளுக்கான, 'மாப் ஆப்' என்ற, இறுதி கட்ட கவுன்சிலிங், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நாளை நடக்கிறது.மேலும் விபரங்களை, www.tnhealth.org,https:// tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment