குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பாக, 2019 அக்டோபர் மற்றும் 2020 ஏப்ரல் ஆகிய இரு பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்வெழுத அனுமதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தேர்ச்சி பெறும் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள், இறுதி வாய்ப்பாக வரும் அக்டோபர் மற்றும் 2020 ஏப்ரல் பருவங்களில் தேர்வெழுதும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கு விண்ணப்பிக்க வரும் 20-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ரூ. 150 அபராதத் தொகையுடன் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம்.
இரண்டாவது வாய்ப்பிலும் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ரூ. 750 அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க செப்டம்பர் 24 கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு www.tndte.gov.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.